பூ சிரிக்கிறது, பட்டாம் பூச்சி சிறகடிக்கிறது !!

Flowers smiling after playing in the rain !
“Poo sirichidhu, pattaam poochi parandhudhu” – these were the words
that inspired this poem and a yet-to-be completed painting .
I originally wrote this poem in a completely different tone – that which
was not acceptable..
That poem was discarded.
Later , one dawn , while I was in awe of the vastness of the ocean,
my heart was singing those same words - and this poem was born….
This song is my tribute to existence and all those
that are a part of it.
It is my small token of gratitude for all that creation showers on me ;
Smiles bestowed on me through its precious individual members ,
like the flower and the butterfly… and the ocean etc….
I get a glimpse of godliness in the caring people in my life,
in the bountiful nature , in the vast celestial expanse ,
in the inviting ocean…
My song is for the individual and the whole - the individual
who is manifested in the whole and the whole that is
embodied in an individual.
There might be spelling mistakes in the poem…
Please pardon… the poem was not proof-read …
என்னை கண்டவுடன்…….
மூடிய மொட்டு நொடியில் அழகிய மலராகி சிரிக்கிறது ,
ஊரும் புழு பட்டாம் பூச்சியாகி என்னை சுற்றி சிறகடிக்கிறது !
சுடும் காற்று சில்லென்ற தென்றலாகி என் கண்ணீர் துடைக்கிறது ,
இறக்கும் தாரகை இன்னொரு ஒளிக்கதிரை என் திசை சிமிட்டுகிறது !
தொடுவானம் அருகில் வந்து என் கரம் தொடுகிறது ,
துள்ளி நீ விளையாட வா என மான்குட்டி துரத்துகிறது !
பனிமலை அருவியாக ஊற்றெடுத்து என் தாகம் தணிக்கிறது ,
வெண்மேகம் கார்முகிலாகி மழையில் என் தேகம் நனைக்கிறது !
அம்மாவசை நிலவு பௌர்ணமியாகி என்னை சிங்காரிக்கிறது ,
சிப்பியும் நன் முத்துக்களை எனக்கு ஆபரணமாக அணிவிக்கிறது !
அயர்ந்த குயில் கூட இன்னிசையில் என்னை தாலாட்டுகிறது ,
கடலலை கரையாமல் என்னை அனைத்து தன்மேல் துயிலச்செய்கிறது .
என் அதிர்ஷ்டம் ? ……
இவை எல்லாம் என் பரவசத்தின் கற்பனையா ?
இல்லை என் மேல் பிரபஞ்சத்தின் கரிசனமா ?
என்ன தவம் செய்தேன் நான் இத்தனை அன்புக்கு ?
ஈடாகுவேனா நான் சிகரம் போன்ற இந்த பண்புக்கு ?
என்றும்…….
சொல்லி தீருமா இயற்கையின் அத்தனை சிறப்பு ,
எத்தனை எத்தனை இனிக்கிறது இந்த மானிட பிறப்பு !
நினைத்தாலே என் நெஞ்சினிலே முளைக்கிறது சிறகு ,
புவியிலே வாழ எனக்கு வேறென்ன வேண்டும் பிறகு !
என்றென்றும் நான் பாடுவேன் சிரிஷ்டிக்கு நன்றி ,
காக்கும் தெய்வம் எனக்கு இதை தவிர வேறு அன்றி .
~~~~

Hey! your blog is nice. view me at : http://tngarkumar.wordpress.com
Hi sis, Nice one! Glad to see this different tone.
If you can speak to nature, you are never alone. Mother Nature offers something for everyone. If you can realise what nature offers you, you are really blessed. The poem is refreshing. Keep it up.