அன்பின் சின்னம் – ‘இயற்கையுடன் என் சந்திப்புகள் ‘ வரிசை
ஆதித்தன் அவளை அழைத்தான் ஆசையில் ,
நிலவு அவன் நெஞ்சில் புதைந்தாள் பூரிப்பில் !
ஆடினார்கள் பகலும் இரவும் கண்ணாம்பூச்சி ,
இன்றோ , அருகருகே துடிக்குது இருவரது மூச்சி !
அவளுக்கு அணிவித்தான் வைர மோதிரம் !
அவன் பிம்பம் அவள் மேனி மேல் மாத்திரம் !
காதலர்கள் அங்கே ஆனந்த சங்கமத்தில் ஒன்று ,
நாணத்தில் இங்கு பகல் கூட இரவானது இன்று !
மெல்ல நகர்ந்தால் அவள் சந்தோஷ மயக்கத்தில் !
பிறை போல் சூரியனும் சிரித்தான் பரவசத்தில் !!
~~~
உலகத்தார்க்கு இது முழு சூரிய கிரகணம் ,
ரசிப்போர்க்கோ , இது தூய அன்பின் சின்னம் !!


மிகவும் அருமை தோழி…வாழ்த்துக்கள்……
தொடர்ந்து எழுதவும்…
I had not checked my email, so didn’t see the notification from wordpress, but I thought u might have written something for the solar eclipse, so checked ur blog.. beautiful poem.. esp. the last 2 line summary.. wow!!!! enjoyed reading it..!!
I enjoyed the peom thoroughly. what a unique way to look at the solar eclipse! Congrants
@sanyasi: நன்றி.
@ART,@Anon: Thanks.